Advertisement

பாஜவில் சேர யார் காரணம்? சசிகலா புஷ்பா விளக்கம்

அரசியல் பிப்ரவரி 02,2020 | 18:30 IST

Share

2016-ல் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி. சசிகலா புஷ்பா, பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார். டில்லி பா.ஜ. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ. பொறுப்பாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சசிகலா புஷ்பா இணைந்தார். சசிகலா புஷ்பாவின் வருகை 2021 தமிழக சட்டசபைத்தேர்தலில் பா.ஜ.வுக்கு வலிமை சேர்க்கும் என முரளிதர் ராவ், பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்தனர். தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.வில் சேர்ந்ததாக, சசிகலா புஷ்பா கூறினார். 2021ல் தமிழகத்தில் பா.ஜ. ஆட்சி மலரும் என்றார். சசிகலா புஷ்பா, 2011முதல் 2014 வரை தூத்துக்குடி மேயராக பதவி வகித்தார். அதன்பிறகு ராஜ்ய சபா எம்.பி.யானார். அவரது பதவி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் பா.ஜ.வில் சேர்ந்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X