Advertisement

ஆயிரம் ஆண்டுகளாய் அசைக்க முடியாத பொக்கிஷம்

சிறப்பு தொகுப்புகள் பிப்ரவரி 04,2020 | 17:03 IST

Share

மிழனின் பெருமை உலகறியச் செய்தவற்றில் முக்கியமானது, தஞ்சை பெரியகோவில். கலை அறிவியலும், தொழில் நுட்பங்களும் நிறைந்ததாக, மாமன்னன் ராஜ ராஜ சோழன், தனது 25வது ஆட்சி ஆண்டில், இக்கோவிலின் கட்டுமானத்தை 1003ல் தொடங்கி 1010ல் முடித்துள்ளார் 1,010 ஆண்டுகள் கடந்த நிலையில், கம்பீரம் குறையாமல், தமிழின் பெருமையை தன்னுள்ளாக தாங்கி நிற்கிறது. தொழில் நுட்பங்கள், அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில், கற்சிலைகளின் வேலைப்பாடுகளும், நுட்பங்களும் இன்றளவும் வியப்பாகவும் அனைவர் மனதில், நாள்தோறும் எழும் கேள்வியாகவும் உள்ளது. கி.பி.1987ல், 'யுனெஸ்கோ ' நிறுவனம், பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோவிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோவிலின் பெருமை, உலகெங்கும் பரவத் தொடங்கியது. மனித மரபை, பண்பாட்டை பறைசாற்றும் கலைப் பொக்கிஷமாகத் திகழ்கிறது இக்கோவில். இங்கு ஆதியும் அந்தமும் கடந்த பரம்பொருள் சிவபெருமான், பிரகதீஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். தஞ்சை பெரிய கோவில் மூலவர் பிரகதீஸ்வரருக்கு, பெருவுடையார் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள பெரியநாயகி அம்மன், ஒன்பது அடி உயரத்தில், நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள். அம்மன் முகம் சிவன் இருக்கும் திசையை பார்த்து திரும்பி இருப்பது அதிசயம். தலத்தின் விருட்சமாக வன்னி மரமும், தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. பெரிய கோவிலின் லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதை நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென, 'ஆர்டர்' கொடுக்க வேண்டும். உலகம் போற்றும் பெரிய கோவிலை கட்டிய, ராஜராஜ சோழன், பட்டத்தரசி யான உலகமாதேவி ஆகியோருக்கு, ஐம்பொன்னால் ஆன சிலைகள், அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ராஜராஜன் படைத்தளபதியான சேனாதிபதி மும்முடிச்சோழ பிரம்மராயன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இரு சிலைகள், கோவிலின் உள்ளே மூலவரான பெருவுடையார் நோக்கி வணங்குவது போல் வைக்கப்பட்டிருந்தன. பல கும்பாபிஷேகங்களை கண்ட ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி இரு சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன், மாயமாயின. 1980, 1997ம் ஆண்டுகளில், இரு முறை நடந்த கும்பாபிஷேகம் தின்போது, சிலைகள் இல்லாமலேயே இருந்தன. மாயமான சிலைகள், குஜராத் மாநிலத்தில் சாராபாய் அருங்காட்சியத்தில் இருப்பது தெரியவந்தது. ஜூன் மாதம் 2ம் தேதி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் இரு சிலைகள் மீட் கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. 60 ஆண்டுகளுக்கு முன் கோவிலில் இருந்து மாயமான பின், தற்போது முதல்முறையாக பிப்., 5ல் நடைபெறும் கும்பாபிஷேகம் ராஜராஜசோழனும், உலகமாதேவியும் காண உள்ளனர் என்பது இந்த கும்பாபிஷேகத்தின் தனிச்சிறப்பு....


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X