Advertisement

100 கிலோ போலி நெய் பறிமுதல்

பொது பிப்ரவரி 04,2020 | 00:00 IST

Share

உணவுப்பொருள் கலப்படம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்துடன், உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர்களுக்கு, 'ஸ்பாட் பைன்' விதிக்கும் அதிகாரத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினர், கடைகளில் அதிரடி 'ரெய்டு' நடத்தி, விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். திங்களன்று, கோவை காந்தி பார்க் அருகே நான்கு பெட்டிக்கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X