Advertisement

நாகூர் தர்கா; சந்தனம் பூசும் நிகழ்ச்சி

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 05,2020 | 12:56 IST

Share

நாகூர் ஆண்டவர் தர்காவின் 463 ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி புதனன்று அதிகாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு செவ்வாயன்று நாகை கூட்டடியில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. நாகையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக செல்லும் சந்தனக்கூடு ஊர்வலம் புதனன்ரு அதிகாலை நாகூர் தர்காவை வந்தடைந்தது. சந்தனக்கூடு ஊர்வலம் தர்கா வாயிலை அடைந்ததும் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பின்னர் சந்தன குடம் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரிபுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறப்பு வழிபாட்டுக்கு பின்பு ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X