Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 05-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 05,2020 | 18:00 IST

Share

மீராபாய் சானு சாதனை கோல்கட்டாவில் நடக்கும் தேசிய பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 48 கி.கி., பிரிவு 'ஸ்னாட்ச்' பிரிவில் 88 கி.கி., துாக்கிய மணிப்பூரின் மீராபாய் சானு, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 115 கி.கி., துாக்கினார். மொத்தம் 203 கி.கி., எடை துாக்கிய புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த உலக பளுதுாக்குதலில் இவர் 201 கி.கி., துாக்கி இருந்தார். ----- பெண்கள் ஹாக்கி: இந்தியா வெற்றி நியூசிலாந்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்தியா, அடுத்த இரு போட்டியிலும் வீழ்ந்தது. பின், 4வது போட்டியில் பிரிட்டனை தோற்கடித்தது. ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நவ்னீத் கவுர் 2 கோலடித்து கைகொடுத்தார். ----- ஜூனியர் உலக கோப்பை: பைனலில் இந்தியா தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 172 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் சுஷாந்த் 3 விக்கெட் வீழ்த்தினார். சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி 35.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 105, சக்சேனா 59 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். ----- மஹாராஷ்டிரா ஓபன்: குன்னேஸ்வரன் வெற்றி புனேயில், ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற மஹாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் குன்னேஸ்வரன் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் மேடெனை போராடி வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் காடே 6-2, 6-4 என, செக் குடியரசின் வெசெலேயிடம் வீழ்ந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X