Advertisement

மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 05,2020 | 20:53 IST

Share

புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் உள்ள மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, நடராஜர், தியாகராஜர் சன்னதிகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, கோவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்துவந்தது. புதனன்று கும்பாபிஷேகம் நடந்தது. மகா கும்பாபிஷேகத்தை துவங்கி வைக்கும் விதமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பச்சை நிற கொடியை அசைத்தார். அதைத் தொடர்ந்து கோயில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புனித நீர் கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X