விளையாட்டு பிப்ரவரி 06,2020 | 00:00 IST
பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி திருச்சி, திருவெறும்பூர் அருகே மத்திய பாதுகாப்பு படைகளின் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெச்.ஏ.பி.பி.யில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படை தொழிற்சாலைகளின் 11 கம்பெனிகளை சேர்ந்த, 54 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒற்றையர் பிரிவில் ஆவடி வெற்றிவேல் முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் திருச்சி அன்பரசு- ராஜேந்திரன் ஜோடி முதலிடம் பிடித்தது. ஓப்பன் ஒற்றையர் பிரிவில் திருச்சி சகாயராஜனும், இரட்டையர் பிரிவில் திருச்சி மோகனகிருஷ்ணன் - கார்த்திகேயன் ஆகியோரும் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து