Advertisement

பேரறிவாளன் விடுதலை; கவர்னர் கையில்

பொது பிப்ரவரி 07,2020 | 17:48 IST

Share

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இதுவரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு போட்டார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்தது. ''7 பேரை விடுவிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதனால் நளினி செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்; பேரறிவாளன் தாக்கல் செய்த கருணை மனு கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. அதன் மீது கவர்னர்  சுதந்திரமாக முடிவெடுக்கலாம்'' என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. வழக்கு பிப்ரவரி 12ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X