Advertisement

லோக்சபாவில் கடும் அமளி; எம்.பி.க்கள் தள்ளுமுள்ளு

அரசியல் பிப்ரவரி 07,2020 | 17:50 IST

Share

பிரதமர் மோடியை இளைஞர்கள் பிரம்பால் அடிப்பார்கள் என டில்லி பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதால், லோக்சபா அமளி துமளி உண்டானது. வெள்ளியன்று சபை துவங்கியதும் மருத்துவக்கல்லூரிகள் பற்றி ராகுல் ஒரு கேள்வி கேட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எழுந்து ஒரு அறிக்கையை படித்தார். பிரதமரை பற்றி நாகரிகமற்ற முறையில் அவதூறாக பேசிய ராகுலுக்கு இந்த ஒட்டுமொத்த சபை கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்'' என்றார். உடனே காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளி துமளியில் ஈடுபட்டனர். தமிழக எம்.பி. மாணிக் தாகூர் உள்ளிட்ட சில எம்.பி.க்கள், ஹர்ஷ வர்தனை நோக்கி ஆவேசமாக முன்னேறினர். அவர்களை பாஜ எம்.பி.க்களும் தடுக்க இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் கடும் கூச்சல் குழப்பம் உண்டானதால் லோக்சபாவை திங்கட்கிழமைக்கு சபாநாயகர் ஒம் பிர்லா ஒத்திவைத்தார். சபையில் தன்னை காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்க முயன்றதாக, ஹர்ஷ் வர்தன் கூறினார். மாணிக் தாகூர் யாரையும் தாக்கவில்லை; அவர்தான் தாக்கப்பட்டார் என ராகுல் சொன்னார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X