Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 07-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 07,2020 | 18:00 IST

Share

பதிலடி தருமா இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி பிப். 8ம் தேதி ஆக்லாந்தில் நடக்கவுள்ளது. கடந்த முறை சதம் அடித்த இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் கைகொடுத்தால் வெற்றி பெற்று பதிலடி தரலாம். ................ இந்தியப்பெண்கள் தோல்வி இந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதிய முத்தரப்பு 'டுவென்டி-20' லீக் போட்டி மெல்போர்னில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மந்தனா 45 ரன்கள் அடித்து ஆறுதல் தர, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு ஷிவர் அரை சதம் விளாச, 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ................ சிராஜ் சிறப்பான பந்துவீச்சு இந்தியா 'ஏ', நியூசிலாந்து 'ஏ' அணிகள் மோதும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லிங்கனில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 'ஏ' அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நெருக்கடி தந்தார். இவரது பந்துவீச்சில் கேப்டன் ரூதர்போர்டு (40), ரவீந்திரா (12) சிக்கினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து 'ஏ' முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்திருந்தது. ................ ஆர்ச்சர் விலகல் இங்கிலாந்து 'ஆல் ரவுண்டர்' ஜோப்ரா ஆர்ச்சர். சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. 'ஸ்கேன்' செய்ததில், லேசான எலும்பு முறிவு இருப்பது உறுதியானது. இவர், மார்ச் 19ல் துவங்கும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். மார்ச் 29ல் துவங்கும் ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காகவும் பங்கேற்க முடியாது. ...............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X