Advertisement

இரிடியம் மோசடி: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது

பொது பிப்ரவரி 08,2020 | 00:00 IST

Share

திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ராஜா, தனபால் மற்றும் திருப்பூர் மாவட்ட திமுக விவசாயிகள் பிரிவு துணை அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் திருப்பூர், மூலனூரை சேர்ந்த சாமிநாதனை அணுகி தங்களிடம் கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் என்ற உலோகம் இருப்பதாகவும் 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய சாமிநாதன் 5 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து, கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்திற்கு சாமிநாதனை வரவழைத்த மூவரும், மீதிபணம் 20 லட்சத்தை கொடுத்துவிட்டு காரில் இருக்கும் இரிடியத்தை எடுத்து செல்லும்படி கூறியுள்ளனர். சந்தேகமடைந்த சாமிநாதன் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணையில் மூவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரிடியும் இருப்பதாக கூறிய சிறிய குடம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X