Advertisement

மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 09,2020 | 00:00 IST

Share

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதற்காக 41 அடி நீளத்தில் பூக்குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. உப்பாற்றங்கரையில் இருந்து அம்மன் ஆபரண பெட்டி, திரிசூலம் ஆகியவை மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. கோவில் அருளாழி பூப்பந்தை உருட்டி குண்டத்தில் இறங்கினர். அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X