Advertisement

மாவட்ட ஹாக்கி: 'லூர்துமாதா' சாம்பியன்

விளையாட்டு பிப்ரவரி 09,2020 | 00:00 IST

Share

திருப்பூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான ஹாக்கிப்போட்டி, உடுமலை, நேதாஜி மைதானத்தில் நடந்தது. முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள், தன்ராஜ், சோமசுந்தரம் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஞாயிறன்று நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில், உடுமலை லுார்துமாதா பள்ளி 2-1 என்ற கோல் கணக்கில், ஆர்.கே., அகாடமி கிளப்பை வென்றது. 3ம் இடத்துக்கான போட்டியில், ஏ.பி.எஸ் 'ஏ' அணி, 4-0 என்ற கோல் கணக்கில், சென்சுரி அணியை வீழ்த்தியது. முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளில் இருந்து சிறந்த வீராங்கனைகள் 18 பேர் மாநில போட்டியில் விளையாட தகுதி பெறுவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X