Advertisement

ஆம் ஆத்மி அமோக வெற்றி; கெஜ்ரிவால் ஹாட்ரிக் | AAP | Arvind Kejriwal

அரசியல் பிப்ரவரி 11,2020 | 18:20 IST

Share

டில்லி சட்டசபைத்தேர்தல் பிப்ரவரி 8ம்தேதி நடந்தது. செவ்வாய் காலை ஓட்டுகளை எண்ணத்துவங்கியதில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் முன்னிலை பெற துவங்கியது. மொத்தம் 70 தொகுதிகள். ஆம் ஆத்மி கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராகிறார். பா.ஜ.வுக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 2015ஐ போலவே காங்கிரசுக்கு இம்முறையும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லியிலும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா Patparganj பத்பர்கன்ஜ் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். எதிர்க்கட்சித்தலைவர் விஜேந்தர் குப்தா ரோகிணியில் வெற்றிபெற்றார். ஆம் ஆத்மி தலைமையகத்தில் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியது. ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த டில்லி மக்களுக்கு கெஜ்ரிவால் ஐ லவ்யூ சொன்னார். ''பாரத மாதாவின் வெற்றி இது. ஹனுமன் நல்லாசியால் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நல்லாட்சி தொடரும்; ஆம் ஆத்மியின் தொடர் வெற்றி புதிய அரசியலுக்கு அடித்தளம் அமைக்கும்'' என்று கெஜ்ரிவால் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X