Advertisement

இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீ வைப்பு: கடையடைப்பு

சம்பவம் பிப்ரவரி 12,2020 | 00:00 IST

Share

திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மோகன். இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளார். புதன் அதிகாலையில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோகனின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். கொளுந்துவிட்டு எரிந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. சிசிடிவியில் பதிவான வீடியோவில், காருக்கு தீ வைப்பவர்கள் பதிவாகியிருப்பதால் அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதால், கொங்கு மெயின் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில் இருவேறு இடங்களில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X