Advertisement

மருத்துவனையில் டாக்டர்கள் டான்ஸ்

பொது பிப்ரவரி 13,2020 | 00:00 IST

Share

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சம்பத் குமார் என்பவர் ஜனவரி 31ம் தேதி பணி நிறைவு பெற்றார். அவருக்கு கெளரவபடுத்தும் வகையில் பணிநிறைவு விழா, மருத்துவமனையின் மகப்பேறு பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கும் அறையில் நடைபெற்றது. சம்பத் குமார்க்கு மருத்துவர்கள் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவர் கவிதா உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் அதிக சத்தத்துடன் சினிமா பாடலுக்கு நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் உள்நோயாளிகள் இருக்கும் நிலையில் மருத்துவர்களின் செயல் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X