Advertisement

வேட்பாளர் கிரிமினல் பின்னணி வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பொது பிப்ரவரி 13,2020 | 18:05 IST

Share

கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கவேண்டும்; அவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கக்கூடாது என, 2018-ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசோ, தேர்தல் கமிஷனோ உருப்படியாக எந்த முயற்சியும் எடுக்காததால் பா.ஜ.வைச் சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாய் கோர்ட் அவமதிப்பு வழக்கு போட்டார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ''ஒரு வேட்பாளரை தேர்வு செய்ததும் அவரது குற்றப்பின்னணி குறித்த விவரங்களை 48 மணிநேரத்துக்குள் கட்சியின் வெப்சைட், சோசியல் மீடியா மற்றும் பத்திரிகைகளில் சம்பந்தப்பட்ட கட்சி வெளியிடவேண்டும். அதே விவரங்களை 72 மணிநேரத்துக்குள் தேர்தல் கமிஷனுக்கும் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேட்பாளர்களின் கிரிமினல் விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதால் எந்த பயனும் ஏற்படாது; தேர்தலில் நிற்க தடை விதிப்பதுதான் ஒரே வழி என தேர்தல் கமிஷன் வக்கீல் கூறினார். அதற்கு நீதிபதிகள், வேட்பாளரின் கிரிமினல் பின்னணி பற்றிய தகவல்களை கட்சிகள் வெளியிடாவிட்டாலோ அல்லது கோர்ட் உத்தரவை அமல்படுத்த தேர்தல் கமிஷன் தவறினாலோ கோர்ட் அவமதிப்பு குற்றமாக கருதப்படும் என்றனர். ஒரு வேட்பாளரை தேர்வு செய்யும்போது அது தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும்; வெற்றி வாய்ப்பை மட்டும் பார்க்கக்கூடாது என கட்சிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். நடப்பு லோக்சபாவில் 43% எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X