Advertisement

எதிர்ப்பு வலுக்கிறது; காங் தலைமைக்கு தலைவலி

அரசியல் பிப்ரவரி 13,2020 | 19:32 IST

Share

2015ஐப் போலவே 2020ம் ஆண்டில் நடந்த டில்லி சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ரிசல்ட் வெளியான உடனே, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் Sharmistha Mukherjee ஷர்மிஸ்தா முகர்ஜி முதல் ஆளாக தலைமையை எதிர்த்து குரல்கொடுத்தார். ''முடிவுகளை எடுப்பதில் தலைமை தாமதம் செய்வதால் தொண்டர்கள் உற்சாகம் இழந்துவிட்டனர். இனியாவது தலைமை செயலில் வேகம் காட்ட வேண்டும்'' என நேரடியாக விமர்சித்தார். 
 செயல்பாட்டில் புதிய அணுகுமுறையை புகுத்தாவிட்டால் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என, ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்யா சிந்தியா அபாயச்சங்கு ஊதியுள்ளனர். ''காங்கிரஸ் ஆட்சி போய் 6 ஆண்டாகிவிட்டது; இன்னமும் பல மூத்த தலைவர்கள் மத்திய அமைச்சர்களைப் போல நினைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். காங்கிரஸ் தலைவர்களிடம் இருக்கும் இந்த கர்வம் ஒழிய வேண்டும்'' என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். ராகுலுக்கு நெருக்கமான ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில் ''காலம் மாறிவிட்டது; நாடும் மாறிவிட்டது; நாமும் ஸ்டைலை மாற்ற வேண்டும்; மக்களை களத்திலிறங்கி சந்தித்தால்தான் கட்சியை வளர்க்க முடியும்'' என்றார். பதவிவேண்டாம் என, ராகுல் தொடர்ந்து அடம்பிடித்து வரும் நிலையில் தலைமைக்கு எதிராக தொடரும் விமர்சனங்கள் சோனியாவை கவலையடைய வைத்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X