Advertisement

மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற உதவி பொறியாளர் வணிக ஆய்வாளர் கைது

பொது பிப்ரவரி 14,2020 | 00:00 IST

Share

தருமபுரி, நடப்பனஹள்ளியை சேர்ந்த விவசாயி மாது, தனது பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு கேட்டு இண்டூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்க, உதவிப்பொறியாளர் அகல்யா மற்றும் வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. முதல் தவணையாக 4 ஆயிரம் ரூபாய் கொடுத்த விவசாயி மாது, எஞ்சிய 7 ஆயிரம் ரூபாயை கெடுக்க விரும்பாமல், லஞ்ச ஒழிப்புதுறை பேலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய பணத்தை விவசாயி லஞ்சமாக கொடுக்க, அதை பெற்றுக்கொண்ட மின்வாரிய உதவி பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இவர்கள் இருவரும், மற்றொரு விவசாயி மருது என்பவரிடமும் மின்இணைப்புக்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், மின் இணைப்பு கோரும் பலரிடமும் லஞ்சம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X