Advertisement

19 வருஷமா காத்திருந்தும் சுகாதார நிலையம் வரவேயில்ல

பொது பிப்ரவரி 15,2020 | 15:24 IST

Share

திருப்பூர், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, ஆரம்ப சுகாதார மையம் அமைக்க 2009ல், மாநில பொது சுகாதாரத் துறை இயக்குனர் முன்மொழிவு வழங்கினார். இதற்காக, 1.20 ஏக்கர் ஊராட்சி புறம்போக்கு நிலம் பொது சுகாதார இயக்குனர் பெயரில் கிரயமும் செய்யப்பட்டது. 19 ஆண்டுகாளாகியும் சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. கட்டடம் கட்டப்படும் வரை, பெரியாயிபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே பூட்டி கிடக்கும் ஊராட்சி கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X