Advertisement

தம்பதி மீது தாக்குதல்... மன்னிப்பு கேட்ட ஊராட்சி தலைவர்

பொது பிப்ரவரி 16,2020 | 00:00 IST

Share

ஈரோடு, கொடிவேரி அணையில் பொதுப்பணித்துறை சார்பில் 5 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், கொடிவேரி ஊராட்சி தலைவர் சிவகுமாரின் ஆதரவாளர்கள் சிலர், அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இரு சக்கரவாகனத்திற்கு 10 ரூபாயும், கார்களுக்கு 20 ரூபாயும் சட்ட விரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்துள்ளனர். அரியப்பம்பாளையத்தை சேர்ந்த தினேஷ், மனைவியுடன் கொடிவேரிக்கு வந்தபோது, ரசீது இல்லாமல், முறைகேடாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது பற்றி கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அடாவடி பணவசூலில் ஈடுபட்ட அந்த கும்பல் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளது. கணவரை காப்பாற்ற முயன்ற மனைவிக்கும் அடி விழுந்ததுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக, கடத்தூர் போலீசில் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் மீது தினேஷ் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். அப்போது, கொடிவேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரும், அடாவடியாக கட்டணம் வசூலித்த அவரது ஆதரவாளர்களும், தம்பதியிடம் கையெடுத்துக் கும்பிட்டு பொது மன்னிப்பு கேட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X