Advertisement

நான்காம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி; தொண்டர்களுக்கு லட்டு

அரசியல் பிப்ரவரி 16,2020 | 13:16 IST

Share

தமிழக முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி 2017 பிப்ரவரி 16ம்தேதி பதவி ஏற்றார். முதல்வர் பதவியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவருக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு எடப்பாடி லட்டுகளை வழங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். எடப்பாடி கடந்த 3 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 382 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவது ஆட்சி இதோ கவிழ்ந்துவிடும் அதோ கவிழ்ந்துவிடும் என, ஸ்டாலின் பல முறை கூறினார். ஆனாலும் 3 ஆண்டு ஆட்சியை நிறைவுசெய்து நாலாம் ஆண்டில் அடியெடுத்துவிட்டார்; ஸ்டாலின் நினைத்தது எதுவும் நடக்காது அவர் முதல்வராகவும் மாட்டார் என, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X