Advertisement

கொரோனாவுக்கு ஐரோப்பாவில் முதல் பலி; 80 வயது சீன முதியவர்

பொது பிப்ரவரி 16,2020 | 13:30 IST

Share

கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி சீனாவில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆனால், கொரோனாவைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 3வது நாளாக குறைந்துள்ளது என, சீன அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை 2009 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. 142 பேர் பலியாயினர் என, சீன அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம், பலியானோர் எண்ணிக்கை 1665 ஆகவும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,000 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 30 நாடுகளில் 500 பேர் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வௌியே ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரான்ஸ் நாடுகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைரஸ் முதலில் பரவத் துவங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பிரான்ஸ்க்கு சென்ற 80 வயது சீனர், பாரிஸ் மருத்துவமனையில் இறந்தார். ஐரோப்பாவில் கொரோனாவைரஸால் இறக்கும் முதல்வர் நபர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X