Advertisement

கள்ளக்காதலுடன் மனைவியையும் வெட்டிக்கொன்ற கணவர் கைது

சம்பவம் பிப்ரவரி 16,2020 | 00:00 IST

Share

தூத்துக்குடி,கோவில்பட்டி அருகே புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் - மரியம்மாள் தம்பதிக்கு ஒரு மகள்,மகன் உள்ளனர். இந்நிலையில், மரியம்மாளுக்கும் எதிர் வீட்டில் வசித்த திருமணமாகாத ராமமூர்த்திக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த சண்முகம், இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும், தகாத உறவு தொடர்ந்துள்ளது. சண்முகம் வீட்டில் இருக்கும்போதே மனைவி மரியம்மாளும், ராமமூர்த்தியும் மற்றொரு அறையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து ஆத்திரமடைந்த சண்முகம், அரிவாளால் அவர்கள் இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு பசுவந்தனை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து, கொலை தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X