Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 17,2020 | 17:31 IST

Share

சென்னை அணி வெற்றி ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. இதில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை 16 போட்டியில் 7 வெற்றியுடன் 25 புள்ளிகள் பெற்ற சென்னை அணி, அரையிறுதி 'பிளே ஆப்' வாய்ப்பை தக்கவைத்தது. ----------------- ஹம்பி சாம்பியன் அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் நகரில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி மோதிய 9வது மற்றும் கடைசி சுற்று 'டிரா' ஆனது. 9 சுற்றில் 6.0 புள்ளிகள் பெற்ற ஹம்பி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். ஹரிகா (4.5) 5வது இடம் பிடித்தார். ---------------- விதித் சந்தோஷ் வெற்றி செக் குடியரசின் பிராக் நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஈரானின் பிரோஜா அலிரேஜா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விதித், போட்டியின் 24வது நகர்த்தலில் விதித் வெற்றி பெற்றார். ஐந்து சுற்றுக்கள் முடிவில் விதித் 4.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ----------------- நியூசிலாந்து அணி அறிவிப்பு நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 21ம் தேதி வெலிங்டனில் துவங்குகிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. டிரன்ட் பவுல்ட், நீல் வாக்னர் என முன்னணி வேகங்கள் அணியில் இடம் பெற்றனர். -----------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X