Advertisement

ஜப்பான் கப்பலில் கொரோனா பாதிப்பு 542 ஆனது

பொது பிப்ரவரி 18,2020 | 18:05 IST

Share

கொரோனாவைரஸ் பாதித்த பயணிகளுடன் ஜப்பானில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் Yokohama டைமண்ட் பிரின்ஸஸ் கப்பல் பிப்ரவரி 3ம்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 3700 பயணிகள் இருந்தனர். அவர்களில் 300 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு 2 விமானங்களில் மீட்டுச் சென்ற நிலையில் எஞ்சியவர்களுடன் தொடர்ந்து
யோகோஹாமாவில் கப்பல் நிற்கிறது. திங்களன்று 99 பேருக்கும் செவ்வாயன்று 88 பேருக்கும் கொரோனாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கப்பலில் கொரோனாவைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது. கப்பலை தனிமைப்படுத்தி வைத்திருந்த 14 நாள் காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் வைரஸ் தாக்காதவர்களை 
புதன்கிழமை முதல் கப்பலில் இருந்து வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை இந்த பணி தொடரும். கொரோனாவைரஸ் பாதித்தவர்களும் சர்வஜாக்கிரதையாக கப்பலில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என, ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் Katsunobu Kato கட்சுனோபு கடோ கூறினார். கப்பலில் இருக்கும் 138 இந்தியரில் 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X