Advertisement

மாயாற்றை கடக்க மக்களே அமைத்த நடைபாதை

பொது பிப்ரவரி 19,2020 | 00:00 IST

Share

சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா ஊராட்சியில், அல்லிமாயாறு, கல்லம்பாளையம், புதுக்காடு உள்ளிட்ட 5 க்கும்மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமங்களுக்கு செல்ல மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க இப்பகுதி மக்கள் பரிசல் பயணம் செய்கின்றனர். மழைக்காலங்களில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, பரிசல் செலுத்த முடியாது என்பதால், கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிவிடுகின்றனர். இதனால், ஆற்றை கடக்க விஞ்ச் அல்லது சிறுபாலம் அமைத்து தரவேண்டும் என இந்த மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் தீர்வு கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள், மாயாற்றின் குறுக்கே தாங்களாகவே சிறு நடைபாதையை அமைத்துள்ளனர். சிமெண்ட் குழாய்கள் பயன்படுத்தி, தண்ணீர் செல்ல வழிவிட்டும், கற்கள் மற்றும் மணல் மூட்டைகளை அடுக்கி ஒரே நாளில் இந்த பாதையை அமைத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X