Advertisement

புதுச்சேரியில் மதுவிலக்கு

அரசியல் பிப்ரவரி 19,2020 | 16:00 IST

Share

புதுச்சேரியில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் கல்வித்துறை இயக்குனர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியை போதைப் பொருள் இல்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புதுச்சேரிக்கு கஞ்சா திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படுவதாகவும், அதனைத தடுக்க காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் படிப்போடு, நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என தெரிவித்தார். கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X