Advertisement

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மம்தா-பாஜ மோதல்

அரசியல் பிப்ரவரி 19,2020 | 19:15 IST

Share

திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் தபஸ் பால் செவ்வாயன்று மாரடைப்பால் இறந்தார். ரோஸ்வாலி சிட்பண்ட் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தார், தபஸ் பால். கொல்கத்தாவில் அவரது உடலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு மம்தா கூறுகையில், மத்திய விசாரணை அமைப்புகள் கொடுத்த நெருக்கடியால் கடும் மன அழுத்தத்தில் தபஸ் பால் இருந்தார் மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல்தான் தபஸ் பால் சாவுக்கு காரணம். என மம்தா கூறினார். முன்னாள் எம்.பி. சுல்தான் அகமது, எம்.பி. ப்ரசுன் பானர்ஜி மனைவி ஆகியோரது திடீர் மரணத்துக்கும் மத்திய அரசுதான் காரணம் என மம்தா கூறியதற்கு பா.ஜ. பதிலடி கொடுத்துள்ளது. ''திரிணமுல் காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு தபஸ் பாலை மம்தா பலிகடா ஆக்கிவிட்டார்'' என பா.ஜ. மாநில தலைவர் திலிப் கோஷ் கூறினார். Dilip Ghosh


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X