Advertisement

ஓமலூர் அருகே பேருந்துகள் மோதல்; 6 பேர் பலி

சம்பவம் பிப்ரவரி 20,2020 | 00:00 IST

Share

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நரி பள்ளம் என்ற இடத்தில் நேபாள நாட்டு சுற்றுலா பேருந்து, கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்ததது. அந்த பேருந்து, நரி பள்ளம் அருகே, 'ஆரஞ்ச்' என்ற ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுமார் 30 பேர், பலத்த காயமடைந்தனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X