Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 20,2020 | 18:30 IST

Share

வெற்றியுடன் துவக்குமா இந்தியா நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிப்ரவரி 21ல் வெலிங்டனில் துவங்குகிறது. கேப்டன் கோஹ்லி, பிரித்வி ஷா, பும்ரா உள்ளிட்டோர் கைகொடுத்தால் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கலாம். ............ சிறந்த வீராங்கனை சிந்து விளையாட்டு தொடர்பான செய்திகளை ஈ.எஸ்.பி.என்., இணையதளம் வெளியிடுகிறது. இதன் சார்பில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து தேர்வாகி உள்ளார். இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக விருதை கைப்பற்றினார். சிறந்த வீரராக துப்பாக்கி சுடுதல் வீரர் சவுரப் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். .............. கவுன்டி போட்டியில் புஜாரா இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா. ஒரு நாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளில் தேர்வு செய்யப்படுவது இல்லை. இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் டெர்பிஷயர், நாட்டிங்காம்ஷயர் அணிகளுக்காக பங்கேற்றுள்ளார். தற்போது, குளோசெஸ்டர்ஷயர் அணிக்காக முதல் ஆறு போட்டிகளில் மட்டும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ........................ காலிறுதியில் போபண்ணா ஜோடி பிரான்சில், ஏ.டி.பி., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் ஷபோவலோவ் ஜோடி, இத்தாலியின் சிமோன், ஜானிக் ஜோடியை சந்தித்தது. அபாரமாக விளையாடிய போபண்ணா ஜோடி 6-7, 6-3, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. ..........


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X