Advertisement

மாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா!

விளையாட்டு பிப்ரவரி 20,2020 | 00:00 IST

Share

மாவட்ட அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான, பூப்பந்து போட்டியில், கிணத்துக்கடவு அக் ஷயா இன்ஜினியரிங் கல்லுாரி கோப்பை வென்றது. திருச்சி ரோடு, சூலுாரில் உள்ள, ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாவட்ட அளவில், இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கான, 'ஆர்.வி.எஸ்., கோவை டைஸ் - 2020' கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தன. பூப்பந்து இறுதிப்போட்டியில், கிணத்துக்கடவு அக் ஷயா இன்ஜினியரிங் கல்லுாரியும், ஈச்சனாரி கற்பகம் இன்ஜினியரிங் கல்லுாரியும் மோதின. இதில், அக் ஷயா இன்ஜினியரிங் கல்லுாரி, 2-0 என்ற நேர் செட்டில், கற்பகத்தை வீழ்த்தி, கோப்பை வென்றது. மூன்றாம் மற்றும் நான்காமித்துக்கான போட்டியில், சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி, 2-0 என்ற நேர் செட்டில், அரசு தொழில்நுட்பக் கல்லுாரியை வீழ்த்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X