Advertisement

பலியான 3 பேர் குடும்பத்துக்கு 1 கோடி; கமல் அறிவிப்பு

பொது பிப்ரவரி 20,2020 | 19:15 IST

Share

நூலிழையில் உயிர் தப்பினேன்; கமல் உருக்கம் (06) இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்தது. சண்டைக் காட்சிக்காக ராட்சத கிரேன் உச்சியில்
மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. சங்கரும் கமலும் அடுத்த காட்சி பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது ராட்சத கிரேன் விழுந்தது. உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலியானார்கள். அவர்களது உடல்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கமல்ஹாசன், ஷங்கர் அஞ்சலி செலுத்தினர். 3 பேர் குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி வழங்குவதாக கமல் அறிவித்தார். படப்பிடிப்புகளில் நடக்கும் விபத்துகளால் யாரும் மரணமடையாமல் இருக்க சினிமாத்துறையினர் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கிரேன் விழுந்த கூடாரத்தின் அடியில்தான் நானும், நாயகியும் இருந்தோம். நான் 2 அடி நகர்ந்திருந்தால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன்'' என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X