Advertisement

போலீஸ் தேர்வுக்கு ஐகோர்ட் தடை

பொது பிப்ரவரி 20,2020 | 19:25 IST

Share

காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, பிப்ரவரி 2ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள்; இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு போட்டனர். வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.. தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர்கள் தேர்விலும் முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.. குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வானது எப்படி? அவர்கள் அனைவரும் எப்படி ஒரே மதிப்பெண் பெற்றது எப்படி? எழுத்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றது எப்படி? இதுபோன்ற காவலர்கள் சேர்ந்தால் காவல்துறை நிலை என்னாகும்? என நீதிபதி சரமாரி கேள்வி கேட்டார். தமிழர்களாகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம் என்ற நீதிபதி,. தேர்வு நடைமுறைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X