Advertisement

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 8.4 கோடி

பொது பிப்ரவரி 20,2020 | 21:18 IST

Share

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 8.4 கோடியாக குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் எஸ்.பல்லா, அர்விந்த் வீரமணி, கரண் பாசின் ஆகியோர் ''இந்தியாவில் வறுமை'' என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை அளித்துள்ளனர். இந்த அறிக்கை தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2011ல் 27 கோடியாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை, 2017ல் 8.4 கோடியாக குறைந்துள்ளது.
 இந்திய வரலாற்றில் 2011 - 2017 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் மிக வேகமாக வறுமை ஒழிப்பு நடந்துள்ளது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. சுரேஷ் தெண்டுல்கர் குழு நிர்ணயித்த வருவாயின் அடிப்படையில் 2011ல் 14.9 ஆக ஏழைகளின் எண்ணிக்கை இருந்தது. அதுவும் 2017ல் 7.0 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X