Advertisement

ரூ.2,000 குறித்து தவறான கருத்துகளை பரப்பாதீர்

பொது பிப்ரவரி 21,2020 | 18:40 IST

Share

சமூக வலைத்தளம் மற்றும் ஒரு சில ஊடகங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற தகவல்கள் பரவியது. இந்தியன் வங்கியும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பரிவர்த்தனையை நிறுத்தவுள்ளதாக கூறப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இந்தியன் வங்கி சம்மேளனம் இந்த தகவல்களை மறுத்துள்ளது. ஏ.டி.எம்.,களில் 4,000, 6,000 ரூபாய் என பணம் எடுக்கும்போது, முழுவதும் 2,000 ரூபயும் நோட்டுகளே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர். ஏ.டி.எம்., கொண்டுவந்த அடிப்படை நோக்கம், வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்காக வங்கிக்கு வரக் கூடாது என்பது தான். ஆனால், அந்த நோக்கம் சிதைகிறது. இதனால் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களை, ஏ.டி.எம்.,களில் வைப்பதில்லை முடிவு செய்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். இதைப் புரிந்து கொள்ளாது அனைவரும் தவறான கருத்தை பரப்பி வருவதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X