Advertisement

CAA பயம் தேவையில்லை உத்தவ் உறுதி

அரசியல் பிப்ரவரி 21,2020 | 20:43 IST

Share

பா.ஜ.வை கழற்றி விட்டுவிட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மஹாராஷ்ட்ராவில் ஆட்சியைப் பிடித்த உத்தவ் தாக்கரே டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். முதல்வரான பிறகு உத்தவ் பிரதமரை சந்திப்பது இதுதான் முதல் முறை. சந்திப்பின்போது அமைச்சரும் மகனுமான ஆதித்யா தாக்கரே உடனிருந்தார். பிரதமரை சந்தித்த பின் உத்தவ் தாக்கரே கூறுகையில் சிஏஏ, என்.ஆர்.சி. என்.பி.ஆர். குறித்து பிரதமருடன் விவாதித்தேன். சி.ஏ.ஏ.வைக் கண்டு பயப்படத்தேவையில்லை. துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினர் சிஏஏவால் பயன்பெறுவர். என்.ஆர்.சி. நாடு முழுக்க அமலுக்கு வராது; என்.ஆர்.சி.யால் மக்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அப்போது நாங்கள் குரல் கொடுப்போம்'' என உத்தவ் தாக்கரே கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X