Advertisement

திருநகரில் மாநில ஹாக்கி போட்டி

விளையாட்டு பிப்ரவரி 22,2020 | 00:00 IST

Share

மதுரை மவாட்டம் திருநகர் ஹாக்கி கிளப் சார்பில், மாநில ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. போட்டிகளை திண்டுக்கல் மண்டல தலைமை வன பாதுகாப்பு அலுவலர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். திருப்பரங்குன்றம் ஹாக்கி கிளப் தலைவர் பாலு, பயிற்சியாளர்கள் அழகப்பன், பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை, சென்னை, கோவை, 
உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 24 அணிகள், நாக் அவுட் முறையில் பங்கேற்கின்றன. துவக்க போட்டியில் வனத்துறை அணி 6-1 கோல் வித்தியாசத்தில் வாடிப்பட்டி எச்.டி.டி.சி., அணியை வென்றது. 2வது போட்டியில் வாடிப்பட்டி எவர் கிரேட் ஹாக்கி கிளப் அணி 4-1 கோல் வித்தியாசத்தில் விருதுநகர் ரெட்ரோஸ் ஹாக்கி கிளப் அணியை வென்றது. சென்னை வருமான வரித்துறை அணி 3 - 1 கோல் வித்தியாசத்தில் பிளேயர் அகாடமியை வீழ்த்தியது. எவர்கிரேட் அணி 2 - 1 கோல் வித்தியாசத்தில் திருநகர் அணியை வீழ்த்தியது. ஹாக்கி கிளப் நிர்வாகிகள் ரமேஷ், நாகராஜன், செந்தில், சீனிவாசன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X