Advertisement

இந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு

பொது பிப்ரவரி 23,2020 | 16:25 IST

Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்கள் அன்று இந்தியா வருகிறார். சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அகமதாபாத்திற்கு வரும் ட்ரம்புக்கு ஃபார்ச்யூன் லேண்ட்மார்க் நட்சத்திர ஹோட்டலில் Fortune Landmark Hotel இருந்து உணவு வரவழைக்கப்பட இருக்கிறது. தலைமை செப் சுரேஷ் கண்ணா மேற்பார்வையில் தயாராகும் இந்த ஸ்பெஷல் மெனுவில் குஜராத்தின் உள்ளூர் உணவுகள் கொடுக்கப்பட உள்ளது. ஸ்பெஷல் குஜராத்தி இஞ்சி டீ, சோள சமோசா, ஐஸ் டீ, கிரீன் டீ, தானிய பிஸ்கட்டுகள், டோக்ளா, போன்ற உணவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு பின் இந்த உணவுகள் அதிபருக்கு பரிமாறப்படும். இந்நிலையில் டிரம்ப்பிற்கு காப்பி, மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதும், அவர் பிட்சா, பர்கர், டையட் கோக் (diet coke) போன்ற பாஸ்ட் புட் பிரியர் என்பது குறிப்பிடதக்கது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X