Advertisement

மும்மூர்த்திகள் ஆராதனை விழா

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 23,2020 | 00:00 IST

Share

காரைக்காலில் ஆண்டு தோறும் பாலச்சந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில் 27ஆம் ஆண்டு ஸ்ரீமத் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா ஞாயிறன்று நடைபெற்றது. ஸ்ரீகாரைக்காலம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், ஸ்ரீதியாகராஜ சுவாமி மற்றும் ஸ்ரீசியாமா சாஸ்திரி ஆகியோருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கு கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி மும்மூர்த்திகளுக்கு ஆராதனை செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு போன்று மும்மூர்த்திகள் ஆராதனை விழா பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து வழிபடுவதால் இந்நிகழ்ச்சி காரையில் திருவையாறு என அழைக்கப்படுகிறது. மும்மூர்த்திகள் ஆராதனை விழாவில் திருவையாறில் பங்கு கொள்ள முடியாத இசைக் கலைஞர்கள் காரைக்காலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி மும்மூர்த்திகளை வழிபட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X