Advertisement

அட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்

பொது பிப்ரவரி 23,2020 | 19:30 IST

Share

வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் இன்ஜினியரிங் மோகம் குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 2019ம் ஆண்டில் நாடு முழுக்க கிட்டத்தட்ட 90 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கல்லூரிகளும் அடக்கம். இந்தாண்டு தமிழகத்தில் 11 இன்ஜினியரிங் கல்லூரிகளை மூட அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்திடம் கல்லூரி நிர்வாகங்கள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 7 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன. மேலும் 2 கல்லூரிகளை மூட நிர்வாகங்கள் முடிவு செய்தாலும் அதுபற்றி அண்ணா பல்கலைக்கழகத்திடம் முறைப்படி தெரிவிக்கவில்லை. இதன்மூலம் தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 557ல் இருந்து 537 ஆக குறைகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செயல்பட்டு வரும் 60 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர் சேர்க்கை இருப்பதாலும் அவைகளும் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது; இந்த மூடல் படலம் இன்னும் 2 ஆண்டுகளுக்கு தொடரும் என்று, கல்வியாளர் ஒருவர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X