Advertisement

இந்திய மண்ணில் ட்ரம்ப்; மோடி கட்டித்தழுவி வரவேற்பு

அரசியல் பிப்ரவரி 24,2020 | 13:15 IST

Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக இந்தியா வந்தார், ஆமதாபாத் விமான நிலையத்தில் மனைவி மெலனியாவுடன் பகல் 11.37 மணிக்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வந்திறங்கிய ட்ரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். ட்ரம்ப்பை கட்டித்தழுவியும் மெலனியாவை கைலுக்கியும் மோடி வரவேற்றார். ட்ரம்ப் மகள் இவாங்கா , மருமகன் குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகளும் ட்ரம்ப்புடன் வந்தனர். விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம், இசையுடன் ட்ரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் சென்றார். அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக செல்கின்றனர். இந்த ரோட்ஷோவில் 1 லட்சத்துக்கு அதிகமானோர் பங்கேற்று மோடி - டிரம்ப்பை வரவேற்கின்றனர். வழியெங்கும் பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் நடனம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ரோட் ஷோ மொடேரா motera கிரிக்கெட் ஸ்டேடியத்தை அடைந்ததும் அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்றுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X