Advertisement

7 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு

பொது பிப்ரவரி 24,2020 | 17:00 IST

Share

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம்தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. 2019 இறுதிலேயே பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திங்களன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ''நீண்ட நாளைக்குப்பிறகு பள்ளித்தோழர்களை பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. படிக்காமல் விட்ட பாடங்களை வேகமாக படிக்க வேண்டும்'' என மாணவ மாணவிகள் கூறினர். நடத்தாமல் விட்ட பாடங்களை குறித்த காலத்தில் முடிக்க தீவிரமாக முயற்சிப்போம் என, ஆசிரியர்கள் கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X