Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 24,2020 | 18:00 IST

Share

வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா தோல்வி இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 165, நியூசிலாந்து 348 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மயங்க் அகர்வால் 58 ரன் எடுத்தார். பின், 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ----- டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி வெள்ளி ஹங்கேரியில், சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஜோடி 1-4 என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனேடிக்ட் துடா, பாட்ரிக் பிரான்சிகா ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மணிகா பத்ரா, சரத் கமல் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது. ----- ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 20 பதக்கம் டில்லியில், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 74 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஜிதேந்தர் குமார், கஜகஸ்தானின் டானியர் கைசனோவ் மோதினர். இதில் ஜிதேந்தர் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்களான ராகுல், தீபக் புனியா வெண்கலம் வென்றனர். இம்முறை இந்தியாவுக்கு ௫ தங்கம், ௬ வெள்ளி, ௯ வெண்கலம் என ௨௦ பதக்கங்கள் கிடைத்தன. ----- தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸி., தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது 'டுவென்டி-20' போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. கேப்டன் குயின்டன் டி காக் 70 ரன் விளாசினார். சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்து, ௧௨ ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 67 ரன் எடுத்தார். ---------------------------------------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X