Advertisement

101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா?

பொது பிப்ரவரி 25,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி, பாரதியார் நகரை சேர்ந்தவர் 101 வயது பாட்டி மும்தாஜ். தனது மகளின் ஆதரவில் வசிக்கும் இவர், போலியோவால் பாதிக்கப்பட்ட 17 வயது பேரனை கவனித்து வருகிறார். பாட்டிக்கு வரும் பென்ஷன் மற்றும் மகளின் தினக்கூலியை வைத்துதான் வாழ்க்கை நகர்கிறது. உடல்நிலை சரியில்லாத பேரனை வைத்துக்கொண்டு, வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்ளிட்ட அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாததால், அரசின் இலவச வீடு, உதவித்தொகை வழங்கி உதவக்கோரி பல ஆண்டுகளாக மும்தாஜ் பாட்டி மனுப்போர் நடத்தி வருகிறார். எனினும், உதவிகள் கிடைக்கவி்ல்லை. இருப்பினும் தள்ளாத வயதிலும் அரசின் உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார் பாட்டி.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X