Advertisement

டில்லி கலவரம்; பலி 18 ஆனது

பொது பிப்ரவரி 26,2020 | 11:15 IST

Share

டில்லியில் ஜாஃப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட இடங்களில், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பயங்கர மோதல் நடந்தது. கற்களை வீசியும் கம்பாலும் இரு தரப்பும் மோதிக் கொண்டன. கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் செவ்வாயன்று பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. 150க்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கலவரத்தில் உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலவரத்தைக் கட்டுப்படுத்த டில்லி போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார். டில்லியில் அமைதி திரும்ப வேண்டி, காந்தி சமாதியில் முதல்வர் கெஜ்ரிவால் பிரார்த்தனை மேற்கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து டில்லியில் பதற்றமான சூழல்நிலவுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X