Advertisement

இரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்

சம்பவம் பிப்ரவரி 26,2020 | 11:47 IST

Share

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள பெரிய வரிகம் பகுதியில் தோல் கழிவுகள் செவ்வாயன்று கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் அதனை அணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. தோல் கழிவுகள் தீயில் எரிவதால் துர்நாற்றம் வீசுவதுடன் காற்று மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக தோல் கழிவுகள் எரிவதை அணைக்க நடவடிக்கை எடுத்து தோல் கழிவுகளை எரிக்கும் தனியார் தோல் தொழிற்சாலைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X