Advertisement

காதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்

சம்பவம் பிப்ரவரி 26,2020 | 11:52 IST

Share

புதுச்சேரி அருகே உள்ள பெரிய கோட்டகுப்பத்தைமச் சேர்ந்த ராகவன் என்ற வாலிபரும் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். ராகவனின் குடும்பத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதால் அருணாவின் காதலைக் குடும்பத்தினர் எதிர்த்துள்ளனர். இதனால் அருணா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹைதராபாத்தில் கல்வேலை செய்து கொண்டிருந்த ராகவன் இதனையறிந்து அவரும் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருடன் பணியாற்றி சஞ்சய் திங்களன்று ராகவனை கோட்டகுப்பம் அழைத்து வந்ததுடன் அருணாவின் தாய் மாமன் குட்ட ரமேஷுக்கு தகவல் கொடுத்துள்ளார். ராகவன் கோட்டக்குப்பம் வந்ததும் கடத்தி சென்று கொன்றுள்ளனர் அருணாவின் குடும்பத்தினர். இதனையடுத்து கொலை செய்த, பெண்ணின் அண்ணன் பிரவீன்குமார், உறவினர். அருண்குமார், ரஞ்சித்குமார், சந்தோஷ், பாலாஜி, சஞ்சய், பிரகாஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான தாய்மாமன் குட்ட ரமேஷை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X