Advertisement

தமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்

அரசியல் பிப்ரவரி 26,2020 | 00:00 IST

Share

திருச்சிக்கு வந்த முதல்வர் பழனிசாமி, முக்கொம்பு கதவணையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே கிடைத்த தகவலின்படி, திருச்சி, அரியலுாரில் தொழிற்சாலைகள் இருப்பதால், அப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்கப்படாது. மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, வேளாண் மண்டல அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசும் இதற்கு ஒப்புக் கொண்டது என்றார். மேலும், தமிழகத்தில் என்.பி.ஆர். பற்றிய பிரச்னையே இல்லை. ஏனென்றால், மத்திய அரசு, புதிதாக சேர்த்த மூன்று கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. விருப்பமில்லாதவர்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை என, தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X