Advertisement

ஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்

சினிமா வீடியோ பிப்ரவரி 26,2020 | 17:50 IST

Share

உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி, இப்போது ‛அக்கா குருவி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது உலக புகழ்பெற்ற சில்ரன் ஆப் ஹெவன் என்ற ஈரானிய படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். சாமி கூறுகையில், என் முந்தைய படங்கள் எனது அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். இப்படம் 80களில் நடக்கும் கதை என்பதால் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையில் படமாக்கி உள்ளேன். இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துவிட்டு வாருங்கள் என்றார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே ஒப்புக் கொண்டார். இப்போது பின்னணி இசை நடக்கிறது. அடுத்த மாதம் இசை வெளியீடு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக 'சில்ரன் ஆப் ஹெவன்' இயக்குனர் மஜீத் மஜிதியை அழைக்கவிருக்கிறேன் என்றார். --------------------


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X